சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கெளரிபால

அடுத்த அரங்கேற்றம்
—————————-

கோடிகளில் புரளப்போகும் ஆடுகளம்
கேடிகளும் வருவார்கள்
தெருக்கோடி மக்களை நாடியும்
வாடிநின்றாலும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்
கூடியே வருகிறார்கள் கோசம் வேசமுடன்
பாடிவரும் பக்தர்( குண்டர்) பலமுடன்
மாடியில் இருந்து மனைவரை
தாடியுடன் மனுக்கள் கொண்டு
கோடி புண்ணியம் என்முற்றம் வேண்டாம் ராசாக்கள்
நாடிபிடித்துப் பார்ப்பேன்
நாடகம்தான் நாடகம்தான் இதுவரை….

இ. கௌரிபாலா