வியாழன் கவிதை

இசை

சுமித்ரா தேவி

இசை

கவிதை இல 06

கடல் அலையின்
ஒலி அலையே
காற்றில் வரும்
கவி அலையே
கொஞ்சும் குழந்தையின்
சிரிப்பலையே
குமரியின் காதல்
மொழி அலையே
மூங்கில் மீட்டும்
குழல் அலையே
முத்தமிழ் பாவின்
சொல் அலையே
இயலோடு இசைந்தாடும்
இயல் அலையே
என் மனதோடு
மகிழ்வூட்டும்
இசை அலையே
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை