சந்தம் சிந்தும் கவிதை

அல்வாய் பேரின்பநாதன்

தை பொங்கல் (வாழ்க்கை) வாழ்த்துகள்

இயற்கை போற்றும் இனிய பொங்கல்

இயற்கை போற்றும்
இனிய பொங்கல்
எங்கள் பண்பாட்டின்
வாழ்வியல் பொங்கல்

எழுகதிர் சூரியனின்
உயிர்ப்படைப்பில்
பயிர் வளர்த்து உயிர்காக்கும்
உழவனவன்

விதை விதைத்து
கதிர் அறுப்பான்
வியர்வைத் துளிகளை
நெல் மணிகளாய்

சர்க்கரையில் பொங்கலிட்டு
வாழையிலைதனிலே படையலிட்டு
கதிரவனை வணங்கி நிற்பான்
நன்றியுள்ள தமிழனாய்

பொங்கிவரும் மகிழ்ச்சிதனை
பகிர்ந்திடுவோம் யாவர்க்கும்
வணங்கி வாழ்த்தி நிற்போம்
நன்றியுடன் உழவனிற்கு

வழிகாட்டும் தைமகளை வரவேற்று
நாமும் விதைத்திடுவோம்
நல்ல எண்ணங்களை உள்ளங்களில்
பெற்றுடுவோம் நற்பண்புகளை அறுவடையாய்
வாழ்க்கைப் பொங்கலுக்கு

உணர்வும் உழவும் கலந்து பொங்கிடும்
இயற்கை போற்றும் இனிய பொங்கல்
தைத்திருநாள் வாழ்த்துகள்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்