“இப்போதெல்லாம்”…
அப்படி என்ன நடந்தேரியது //
அந்த.. காலை பொழுதில் குருவிகளின் கீச்சல் சத்தங்களுமில்லை //
எப்போதும் ராகம் பாடிக் கொள்ளும் குருவிகளின் ஊசலாட்டங்களுமில்லை//
அடி வானில் அந்தி வான செம்மச்சல் ஒளி கற்றைகளுமில்லை //
அதில் உறைவிடம் தேடிக் கொண்டிருக்கும் காக்கைகளின் சாயல்களுமில்லை//
மாலை நேர ரோட்டோர இருக்கையில் நகைச்சுவையாக பகிர படும் வயோதிபர்களின் சீண்டல் பேச்சுக்களுமில்லை//
அப்போதெல்லாம் தினமும் ஒலித்துக் கொள்ளும் சிறார்களின் சாலையோர விளையாட்டு சினுங்கள்களுமில்ல//
அப்படி என்னதான் ஆகி விட்டது இப்போதெல்லாம் //
அம்னா சஷிது
நிந்தவூர் இலங்கை