அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 08
தலைப்பு = கைத்தொலைபேசி
தூங்க முதல் பார்க்கும் முகமும் தூங்கி எழுந்தவுடன் முழிக்கும் முகமும் இதுதான்
முற்காலத்தில் பல்லாங்குழியும் கையுமாக திரிந்தவர்கள் தற்போது தொலைபேசியும் கையுமாக திரிகின்றனர்
முன்னைய காலத்தில் பொருட்களை வாங்க சந்தைக்கு நடந்து செல்வார்கள்
ஆனால் இப்போது தொலைபேசி மூலம் சந்தையையே வீட்டுக்கு கொண்டு வந்திடுவார்
சுறு சுறுப்பாக இருந்த எங்களை இத் தொலைபேசி சோம்பேறியாக ஆக்கி விட்டது
புதிதாக வரும் திரைப்படங்களை திரையரங்குகளுக்கு சென்று பார்ப்போம்
ஆனால் இத் தொலைபேசியால் திரையரங்குகள் எல்லாம் தொலைபேசி ஆகின
திரையரங்குகளில் உள்ள திரைகள் எல்லாம் தொலைபேசி திரைகள் ஆகின
அபி அபிஷா