கவி இலக்கம் -162. 20.01.2022
கவித் தலைப்பு !
“ கொண்டாட்டக் கோலங்கள் “
கொண்டாட்ட கோலங்கள்
கொரோனாவை மறந்தன
வண்டாட்டம் பறந்தன
வண்ண வண்ண நிகழ்வுகள் !
புத்தாண்டு கொண்டாட்டம்
புதுபுது வண்ணத்தில்
மத்தாப்பு புன்னகை
மல்லிகையாய் மலர்ந்தன !
இல்லத்தில் கொண்டாட்டம்
இனித்தன உள்ளத்தில்
செல்லக் குறும்புடன்
சென்றன கொண்டாட்டம்!
வண்ணவண்ண கோலங்களாய்
வாழ்க்கை மலர்ந்திட
திண்ணமாய் போராட்டம்
தித்திப்பாய் மலரட்டும் !
திண்டாட்ட தேரோட்டம்
திசையறியா பறந்தன
மண்டாடும் உள்ளங்கள்
மனத்திடம் கொண்டன !
இயற்கையை கொண்டாடும்
இலைதளை காய்களுடன்
செயற்கை நட்புறவால்
சங்கமித்தே மகிழ்ந்தன !
இலக்கிய படைப்புடன்
இதயங்கள் பேசின
வலக்கரம் இடக்கரம்
வில்லம்பாய் இணைந்தன !
இளமை முதலாய்
இணையாய் முதுமையும்
களத்தில் இறங்கி
கனிந்து மகிழ்ந்தன !
பண்டிகை கொண்டாட்டம்
பற்பல் படைப்புடன்
வண்டிமாடு மஞ்சுவிரட்டி
வகைவகையாய் கொண்டாட்டம்!
வண்ண வண்ணகோலத்தில்
வரைந்த எண்ணங்கள்
கண்ணிரண்டும் பறித்தது
களிப்புடன் கொண்டாட்டம்!
நன்றி🙏