சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

திருமதி.அபிராமி 09.05.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -221
தலைப்பு !
“காணி”
வனமது தாயக காணி
வளமும் நிறைந்த பூமி //

தனமது கையிலும் இல்லை
தங்கவோர் இடமில்லா தொல்லை//

இனத்தவர் சிலரும் சேர்ந்து
இரவுபகல் வெட்டினர் சோர்ந்து //

கனத்த உழைப்பின் பாணி
கண்ணில் பட்டது காணி

வெட்டிய காணியின் வீடு
வேதனை நிறைந்த கூடு //

பட்டினி பஞ்சம் ஊடே
பணியின்றி தவித்தது நாடே //

கட்டிய கனவுக் கோட்டை
கரைந்தது உயிர்பலி வேட்டை //

விட்டுப் பிரிந்தோம் நாட்டை
விடிவுவரை விடைகொடுக்க
மாட்டோம் //
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

கவித்திறனாய்வு மிகமிக நேர்த்தி.
என் மனம் நிறைந்த போற்றுதல் பாராட்டுக்கள்.பாவை அண்ணா அவர்களே … மற்றும் கவிஞர் சக்திதாசன் அவர்களே🙏🏻🙏🏻🙏🏻