சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-244
தலைப்பு! “ கலவரம்”
அன்றாட வாழ்வுதனில் அனுதினமும்,
ஆயிரமாம் வாழ்வியல் கலவரம்!
நன்றாக ஓர்ப்பணி நம்வசம்,
நாள்தோறும் இன்றேல் கலவரம்!
ஒன்றாய் கூடும் உறவுகள்,
ஓர்மாற்று கருத்திடல் கலவரம்
நன்றே நாள்தோறும் செய்தாலும்,
நல்லவர்க்கும் ஓர்கல்லடி கலவரம்
குன்றா உள்ளமுடன் நாள்தோறும்,
கொடுத்துவாழக் குறையும் கலவரம்!
மன்றில் வருவோரைக் வரவேற்று,
மனதாரக் உபசரிக்ககுறையும் கலவரம்!
சென்ற இடம் சிறக்கும் நன்னடதை,
செல்வந்தரையும் நாணச்செய்யும் கலவரம்!
அன்றும் இன்றும் என்றும்,
அன்புடன் வாழ அகலும் கலவரம்!
அபிராமி கவிதாசன்.
05.12.2023