26.04.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -172
தலைப்பு !
“பகிர்ந்து பழகுவோம்”
வருத்தம் நெஞ்சை
வதை செய்ய
இருத்திய சோகம்
இதயம் நொறுக்கும்
உறவின் கரங்கள்
உயர்ந்து ஓங்கி
இறக்கை கட்டி
இணையும் நட்பில்
ஆறுதல் அழைப்பு
அழைத்து உறவை
கூறுதல் அமைதி
குழம்பிய மனசு
இன்பத் துன்ப
இதய சூழலில்
நன்மை தீமை
நம்மில் பகிர்வோம்
கவிப்பார்வைக்கு நனிமிகு
நன்றிகள் பாவை அண்ணா🙏