வியாழன் கவிதை

அபிராமி கவிதாசன்

விருப்பு தலைப்பு ! 31.03.2022

நேரிசை கலிவெண்பா
“ பெண்ணின் பெருமை “

பிறப்பினை ஈன்றிடும் பெண்ணின் பெருமை
சிறப்புடை மானிடத்தின் சீர்மை – அறமாம்
திறமுடை சக்தியால் திண்ணம் நிறைய
இறக்கும் சுமையின் இறை

குலத்தில் விளக்காய் குலமகளாய் நிற்பாள்
நலத்தில் அக்கறை நல்கி-நிலமாய்
இலட்சம் படைப்பாள் இலட்சியம் வெல்வாள்
உலகினை ஆழ்வாள் உழைத்து

எறும்பின் உழைப்பினை எள்ளி நகைப்பாள்
உறுதியின் உண்மையின் உள்ள- அறும்பு
சிறுதுளி வெள்ளமாம் சிக்கனத்தின் செம்மல்
இறுதிவரை காத்திடுவாள் ஈந்து

பின்னுறங்கி முன்னெழும் பெண்மை முழுமதி
புன்னகை சிந்திடும் பூவினத் – தென்றலாம்
அன்றலர் மல்லிகை அன்பியப் பெண்மகள்
மன்றினில் நிற்பாள் மலர்ந்து

மகளிரை வாழ்த்துகின்றேன் மாண்பினை போற்றி
புகழுரை சூட்டி புனித அகத்தால்-
சிகரத்தை எட்டிடும் சித்திர பெண்மை
பகலவன் தீபமாம் பாருக்கு

நன்றி 🙏