வியாழன் கவிதை

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -165
தலைப்பு ! 24.03.2022
“ துளி நீர் “
உள்ளம் கலங்கி உயிரைப் பிழியும்
வெள்ள வேதனை வேலன்பாய் பாய்ந்திட
எள்ளி நகைக்கும் எதிரிகள் முன்னே
எதிர் நீச்சல் போடும் துளி நீர்

துளிநீர் சிந்திட துன்பம் குறையுமென கட்டிவைத்த கண்ணாடி கோட்டைக்குள்
கல்லடி பட்டு கலங்கிய இருதயமே
சிந்தாதே கண்ணீரை – சிந்திபல
மந்திரக் கதை சொல்லும்

பூட்டி வைத்த மனத்தின் சோகம்
சாட்டை அடியால் துளிநீர் சிந்த
விழிநீர் பலரின் வேதனை சொல்லி
துளிர்விடும் தர்க்கம் சுயதோற்றம் தோன்றும்

விலையென்ன வேண்டுமென விண்ணப்பித்து சொல்லிவிடு
வீணாக சிந்திடாதே விலை மதிப்பு
மிக்க கண்ணீர்துளி கரைந்திட
கருகி விடும் கண்ணீர் குருதி

ஆனந்தக் கண்ணீரும் அரங்கேறும்
அவ்வப்போது
அவமானத்தின் கண்ணீரும் மண்ணில்
புழுவாய்
மடியத்துடிக்கும் தருணம்
துளிநீர் துளிர் விடும்

நன்றி 🙏