சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் கவி வாரம் 167
தலைப்பு !
“ பணி “

பணிப்பெண்ணே உன்பணி
பெரும்பணி இல்லத்தில்
இடர்விடா தொடர்பணி
இருதயமே நோகுமடி /

பணிவிடையும் பக்குவமும்
பற்கலையும் கற்றவளே
கூலிபோட்டு வேலைசெய்யின்
குடிமூழ்கி போகுமடி /

பணியோடு பயணிக்க
பலனுண்டு பாரினிலே
துணிவொன்றே வேண்டுமடி
துயரினை வென்றெடுக்க /

ஆயிரம் இன்னல்கள்
அருகினில் பயணிக்க
அத்துனையும் எடுத்தெறியும்
ஆயுதமே பணிக்கருவி /

உயிருள்ள காலம்வரை
உழைத்துண்ணும் தேகமடி
துயிலும் நிம்மதியில்
துவன்றிடா நோயிலடி /

நன்றி வணக்கம்
பாவை அண்ணா 🙏