வியாழன் கவிதை

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம்-164 10.03.2022
தலைப்பு!

“ பெண்ணினமே”
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே
பாருக்குள் உன்புகழ் பெருமிதம் கண்ணே/

பட்டங்கள் பெற்று சட்டங்கள் செய்வாய்
ஏட்டினை தொட்டு நாட்டினை ஆழ்வாய்/

ஆழ்வதும் உன்னாலே -பெண்ணே
அழிவதும் உன்னாலே/

ஆதியும் அந்தமுமாய் மன்றின்
அவதாரம் பெண்ணன்றோ/

தந்தைக்கு மகளானாய் பதிக்கு தாரமானாய்
குழந்தைக்கு தாயானாய் குடும்பத்தின்
குத்துவிளக்கானாய் /

அச்ச மட நான பயிர்ப்பு
அத்தனையும் உன்றன் அழகிய படைப்பு/

அன்பின் கணவருக்கும் அழகிய குழந்தைக்கும்
அருகில் சுற்றத்திற்கும் அன்புஒளி நீயன்றோ /

ஓயாத உழைப்பும் ஒருஉயிர் உன்னில்ஜனிப்பு
நீயாக இன்றி வேறுயாரேலே முடியும்/

ஒருதீபக் கல்வியாலே ஒளிதீபம் தந்தவளே
உடல்பொருள் ஆவியும் தானமாய் தந்தாயே/

உன்றனைப் போற்றி பேசிடவே பெண்ணே
உலகினில் நான் பிறப்பெடுத்தேன்/

உன்றன் புகழ்பாடிடவே ஜென்மம்ஏழு போதாது
என்றன் பெண்ணின மகளே பெருமிதமே /

நன்றி.