சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு…. 21.02.2022
“ சாந்தி “
புயலுக்குப்பின் போராடி
பூத்திருக்கும் சாந்தி

போருக்குப்பின் வாதகுருதி
பாருக்குள் சாந்தி

அங்குமிங்கும் பனிப்போர்
அல்லல்பட்டோம் சாந்தி

எழுத்தறிவின் எழுச்சிமுடக்கம்
ஏட்டைவிட்டோர் சாந்தி

மறைந்த உயிர்களின்
மனவேதனை சாந்தி

சத்தமின்றி யுத்தமின்றி
சரிந்தவீழ்ச்சி சாந்தி

மாற்றம்பல மண்ணில்கண்ட
மனிதஉயிரே சாந்தி

இழப்பையெண்ணி வருந்தி
இடிந்த மனங்கள் சாந்தி

சாந்தி சாந்தி சாந்தி
சாந்தி ஏந்தி சாதனைசெய்

நன்றி வணக்கம்
பாவை அண்ணா🙏