சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
தலைப்பு !
“அன்பின் பங்கு “ 15.02.2022
ஆதி அன்பே அன்னை ஆவார்
பாதி அன்போ தந்தை ஆவார் /
அண்ணன் தம்பி அக்காள் தங்கை
வண்ண அன்பை வாகை சூடி/
எண்ணமெங்கும் ஏற்பாள் உறவை
திண்ணமாக மிளிரும் தீபம் ஓளியாக /
கண்ணில் கணவர் கருத்தில் வைத்து
வண்ண வாழ்வில் வாகை சூடி/
பந்தி போட்டு பகுந்து அளிக்க
பங்கு கேட்டு பிள்ளை நிற்க/
பிறந்த வீடும் புகுந்த வீடும்
துறந்த அன்பால் துவள்வாள்பெண்மை/
சுற்றம் உறவுகள் சூழும் நட்பும்
வெற்றி பெற்றிட விடிவு தருமே /
அன்பாய் ஒன்றை அளிப்பாள் பரிசாய்
நன்றென்றே வாழ்வினில் நயம்பட வாழ்வாள் /
நனிநன்றிகள் பாவை
அண்ணா 🙏