வியாழன் கவிதை

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -162. 26.01.2022

பா நேரிசை சிந்தியல் வெண்பா
“தைமகளே வருகவே”

1.
தைமகளை வாழ்த்துவோம் தந்தருள்வாய் வாழ்வையும்
பூமலர்கள் தூவியும் போற்றி -பாமணக்க நாமணக்க பாக்கள் நவின்று

2.
இயற்கையை போற்றுகின்றேன் இன்னல்கள் காரும்
துயரங்கள் துன்பங்கள் தீரும்- அயரா
இயற்கை அழிவினை சாடு

3.
பூமித்தாய் மடிமீதுதில் பூத்திருக்கும் பிள்ளைகள்
நாமிருவர் வேண்டுகிறோம் நோய்தீர்க்க – சேமிப்பாய்
சாமிநீ சந்தோசம் சார்ந்து

நன்றி.