சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…. 25.01.2022
“ பரவசம் “

பதியமிட்ட விதையொன்று பயிராகி செடியாகி
முதல் பொட்டு பூவாகி பூத்திருக்கும் செடியில்
பார்த்திருக்கும் கண்கள் பரசவத்தில் பொங்கும்
இதயத்தின் துடிப்பு தித்திக்கும் பரவசம் !

அடைவைத்த முட்டைக்காய் காத்திருக்கும் உள்ளம்
அழகிய குஞ்சுகள் அவதரிப்பைக் காண
அந்தநாளை எண்ணிஎண்ணி ஆனந்தம் பொங்கும்
அங்கொரு முட்டையில் மூக்கைக்கண்டு பரவசம் !

சுயகவி ஒன்றினை சுகமாகய் படைத்துவிட்டு
என்றோ ஒருநாள் ஆண்டுகள் கழித்து
மீண்டும் அதனை எடுத்துப் படிக்க
மீளா இன்பத்தில் இதயம் துடிக்கும் பரவசம்

இரவு பகலாய் இயற்றிய படைப்பு
கருவாய் உருவாய் கைகளில் தவழும்
உறவும் நட்பும் உற்சாகம் ஊட்ட
விழிகள் பொங்கும் வியப்பின் பரவசம் !

நன்றி 🙏