சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக.. 18.01.2022

பாமுக பூக்கள்
பாரினில் பாக்கள்
பூமுகம் மலர்ந்திட
பூத்ததே ஆக்கமொன்று

சந்தம் சிந்தியதே
சாதனை படைத்ததே
சொந்த நூலாகி
சுவர்க்கத்தில் சேர்த்ததே

முத்தான சொத்தாகி
முதல் பூக்கள் பூத்தன
வித்தாகி பாமுகத்தில்
விளைந்தே சொரிந்தன

வாரம்தோறும் வாழ்த்துவாகை
வகைவகையாய் சூட்டியே
தோரணக் கோர்வைகள்
தோப்பாகி நின்றன

அர்ப்பமென எண்ணியவை
அதிசயமாய் நிகழ்ந்தன
கர்ப்பமான கனவுகள்
கரம்வந்தே மகிழ்ந்தன

பூவிலகில் பூத்திட்ட
புன்னகை பூக்களே
மூவுலகும் போற்றிடும்
முதன்மை பாக்களே

அதிபருடன் கவிப்பாவை
அண்ணாவின் பெரும்பங்கில்
கதிரென விளைந்தே
களத்தில் நிறைந்தன..

நன்றி வணக்கம்🙏