வியாழன் கவிதை

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -161
கவித் தலைப்பு !

“இரத்தம் கொதிக்குதடா”

கூட்டிற்குள் அடைப்பட்ட கூண்டு கிளியல்ல
நாட்டிற்க்காய் உயிர்ஈந்த நற்றமிழ் உறவுகளே /

நடைபிணமாய் வாழ்ந்தாலும்
நட்புறவோ தாய்நாடே
தடைகள் பலகண்ட தன்நிகரில்லா என்நாடே/

வீரமறத் தமிழன் விளைந்தமண் முத்துகளே
சாரதி மனவலிமை சார்ந்த சொத்துக்களே/

வாழப்பிறந்த மனிதரல்ல வஞ்சக நெஞ்சறுத்து
ஆழப்பிறந்த தமிழனடா ஆதித்தமிழ்
மைந்தனடா/

மடிந்தே வீழ்ந்தாலும் மடிஎன்றன் தாய்மண்ணே
படிந்த வடுக்கள் புதைந்த இதயங்கள்/

இறுதிமூச்சுக் காற்றின் இதயஅறை நான்கும்
உறுதிகொள்ளும் சுவாசிக்க உள்நாட்டு தென்றலென/

எத்துணை இன்னல்கள் எதிர்க்கும்வ லிமையுண்டு
இத்தரணி காலம்வரை ஈழத்தமிழ் உறவுண்டு /

வார்த்திடும் தலைமுறை வரலாற்று சுவடுகள்
வார்த்தைகள் உதிர்க்காது வந்தனம் சமர்ப்பணம்/

நன்றி வணக்கம்🙏