சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…
“உழவும் தொழிலும்”
உழவுக்கும் தொழிலுக்கும்
உரித்தில்லா தேசத்தில்
உரிமைக்குரல் ஒன்று
உருகுதே ஊமையாய்..
சுட்டமண் தேசத்தில்
சுகந்தமாம் இயற்கைவளம்
சுதந்திரமாய் விவசாயம்
சுவர்க்கமன்றோ தாய்நாடு..
ஆற்றுநீரல் நீராடி
ஆனந்தமாய் அரிசிகோலமிட்டு
ஆர்பரித்து ஆனந்தமாய்
ஆசிபெற்ற ஞாபகமும்
நெஞ்சோடு..
பச்சரிசி அறுவடையும்
பல்வகை காய்கனியும்
படையலிட்டு நன்றிகூறி
பகலவனுக்கு படைத்ததை
மறவேனோ…
இயற்கைக்கு நன்றிகூறும்
இந்நாளே பொன்னாளாம்
இல்லத்தில் செல்வம் பொங்க
இறைவா வணங்குகிறேன் ..
மிக்க மிக்க நன்றி 🙏
பாவை அண்ணா.