வியாழன் கவிதை

அபிராமி கவிதாசன்.

“மாற்றத்தின் திறவுகோல்” 06.01.2022

மாற்றத்தின் திறவுகோல்
நாமாக வேண்டும் /

மனத்தாலும் மதியாலும்
மலர்ந்திடல் வேண்டும் /

பணித்திடம் மனத்திடம்
பதித்திடல் வேண்டும் /

மாற்றமொன்றே மலர்சிதரும்
மதித்திடல் வேண்டும் /

தான்றிந்த வினையாவும்
தானமிடல் வேண்டும் /

விடாமுயற்சி விசுவரூபம்
விதைத்திட வேண்டும் /

சத்தமின்றி நித்தமுமே
சமரசம் வேண்டும் /

விட்டுகொடுத்து விடைபெறும்
வித்தைகற்க வேண்டும் /

முத்துப்பல் புன்னகையை
முதல்பரிசளிக்க வேண்டும் /

ஓயாத தொடர்கதை
ஓங்கிட வேண்டும் /

ஒவ்வொரு நாளுமே
ஒளிர்ந்திடல் வேண்டும் /

மாற்றத்தைப் பெற்றுத்தான்
மாமனிதனாக வேண்டும் /

நன்றி வணக்கம்.