சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதன்

*_சந்தம் சிந்தும் வாரம் -230_*

தலைப்பு !

*“குறுக்கீடு”.* *(தலையீடு)*

அடுத்தவர் துன்பத்தில்
அக்கறை தலையீடு
ஆபத்தில் முடிந்திடும்
அனுபவம் உணர்த்திடும்!

எடுத்ததும் வார்த்தையை
எதிரும் புதிருமாய்
ஏகமாய் இறைத்ததை
எடுக்கமுடியாது அறிந்திடும்!

தடுத்து நிறுத்தவும்
தலைமைப் பொறுப்பிலும்
துடித்து குறுக்கிடும்
துன்பம் களைத்திடும்!

சுடும் வார்த்தை
சடுதியில் மறையாது
சட்டென எதிர்த்திட
சண்டையில் முடிந்திடும்!

வேலி ஓணானை
வேட்டியில் முடிவதேன்?
வீதி தேரை
வீட்டிற்க்குள் இழுப்பதேன்?

_-‘திருமதி. அபிராமி கவிதன்_
15.08.2023.