வியாழன் கவிதை

அபிராமி கவிதன்

“தீப ஒளியே”
தீவினை அகற்றி
நல்வினை புகட்டி
திருநாள் அன்று
தீப ஒளியேநீ வா வா

மக்கள் உயிரை
சுட்டுப் பொசுக்கும்
மாக்கள் எண்ணத்தைப்
மாற்றும் ஒளியேநீ வா வா

இயற்கை அழியும்
இன்னல்கள் இனியும்
இத்தரணியில் வேண்டாம்
இருளைக் களைத்து தீபஒளியே வா வா

பசியும் பட்டிணியும்
பல்வகை நோயும்
பாரினில் நீங்கிட
பரவச ஒளியேநீ வா வா

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
உலக நியதி—ஓரினம்
மனிதரென்போம் உற்றுமையுடன்
வாழவேண்டு ஒளியேநீ வா வா

தனக்கென்று வாழ்ந்தால்
தரணியாழ முடியாது
நமக்கென்று உழைத்தது
நம் உறவுடன் வாழ தீபஒளியேநீ வா வா

07.11.2023
அபிராமி கவிதன்