வியாழன் கவிதை

அது எது

ஜெயம் தங்கராஜா

கவி 731

எது அது

எனக்குள்ளும் உண்டு உனக்குள்ளும் உண்டு
யாரிடம் இல்லை இதன் செயற்பாடு
எவரிடம் இல்லை இதனது வெளிப்பாடு
என்னிடமில்லையென்றால் இல்லை அங்கு மெய்ப்பாடு

விலங்குகளிடமொன்றும் பெரிதாக நானிதைப் பார்த்ததில்லை
பட்சிகளிடமும் குறைந்தபட்சமேனும் நானிதை காணவில்லை
மனிதனால் மட்டுமே செய்யக்கூடிய திருவிளையாடலது
இயல்போ இயற்கையோ செயற்கையோ தெரியாதது

அன்று நக்கீரப்புலவரிடம் சிவபெருமான் காட்டியது
இன்றும் பெரும்பாலானோர் அட்டகாசமாய் காட்டுவது
நல்லதுக்கு உட்பட்டால் பொல்லாமை நிகழாது
கெட்டதற்கு பயன்படின் வாழ்க்கைக்கு மெய்யேது

பற்பலர் இதன்பால் கைதேர்ந்தவர்களாகவே உள்ளார்கள்
சிற்சிலர் அதையறியாது முட்டாள்கள் ஆனார்கள்
மெய்யதா பொய்யதா அறிந்திட ஞானமுமில்லை
செய்வார்கள் செயலில் இருப்பது தெரிவதுமில்லை

நாளுக்குநாள் கூச்சமேயின்றி வாழ்க்கையில் அரங்கேறும்
பயனடைந்தவர் இவராக பாதிக்கப்பட்டவர் வேறொருவராக
கையும் மெய்யுமாக பிடிபட்டாலும் சகசமப்பா
வாழ்க்கையிலை சக்கைபோடோபோடும் இவர்களுக்குத்தான் காலமப்பா

ஜெயம்
27-06-2024