வியாழன் கவிதை

அடையாளம்

நேவிஸ் பிலிப் கவி இல138 20/06/24

பாரெங்கும் மூண்ட போரால்
வன்முறை அடக்குமுறை
சிறகொடிந்த சிட்டுக்களாய்
அலையும் அபலைகள்

கலைந்த வாழ்வினால்
கசிந்திடும்அழுகுரல்
வறுமையும் கொடுமையும்
தாண்டவமாடுது

சொந்த வீடு நாடு
சொந்த பந்தமெவருமில்லை
உற்ற மண் துறந்து
முகவரிகள் தொலைத்து
அடையாளமேதுமில்லா
வெற்றுத் தாளாய்

தஞ்சம் புகு நாட்டினிலே
அகதி என்ற அந்தஸ்து
உரிமை ஏதும் கிடைத்திடுமா
மானுடத்தின் ஏக்கம்இது

நெஞ்சம் வலிக்குது
கண்கள் கலங்குது
அகதி என்ற அரச முத்திரையே
இவர்களின் அடையாளம்.

நன்றி வணக்கம்.