வியாழன் கவிதை

அடையாளம்

சுமத்ரா தேவி

கவிதை இலக்கம் 16
தலைப்பு
அடையாளம்

அடிவேர் அகழ்ந்து அடிப்படை தகர்த்து
துடிப்பவர் துவழ
துன்பங்கள் சேர
கொடும்பகை தொடுக்கும்
குடிகளின் கூட்டால்
மடிந்தவர் நொடிந்தவர்
அடி இழந்தவர் நோக
புவிதனில் இவர்கள்
புலன் சூட்டுவதென்ன
ஏதிலிகளாக ஏழைகளாக
இயல்புகள் தொலைக்க
இவர்கள் ஆற்றும்
இன முரண் தான் என்ன
அடையாளத்தின் அழிப்போ
சுமத்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை