வியாழன் கவிதை

அடையாளம்

ஜெயா நடேசன்

வியாழன் கவிதை நேரம்-20.06.2024
கவி இலக்கம்-Jeya Nadesan
“அடையாளம்”
—/——/—-
அக்கரை பச்சையென்று
அக்கரையில் இருந்து வந்தோம்
அகதி என்ற போர்வையிலே அத்தனையும் இழந்து வந்தோம்
தமிழன் பெயர் மாறி போர்வையிலே
அடையாளமே தொலைத்து நின்றோம்
உயிரைக் காக்கவென்று
அக்கரையை தேடி வந்தோம்
இக்கரைக்கு வந்த பின்னே
அக்கரையில் அருமையை உணர்ந்தோம்
உயிர் தந்த தாய் மண்ணை
அடையாளம் தொலைத்து நின்றோம்
தமிழர் பண்பாடு தொலைத்து
நெற்றியிலே பொட்டு இழந்து
பெயர்களிலே மாற்றம் பெற்று
வாயாலே சொல்ல முடியாத நாமங்களாக
அடையாளம் தொலைத்த தமிழ் இனங்கள்
எம் இனங்கள் தந்த சுகம்
பண்பாட்டு விழுமியங்கள் தொலைத்து நிற்குறோம்
ஜெயா நடேசன்
வியாழன் கவிதை நேரத்திற்காய்