வியாழன் கவிதை

அடைக்கலமாய்……

வசந்தா ஜெகதீசன்

வேரறுத்து வீழ்ந்த கணம்
வெந்துயரை நீக்கி வைத்தியம்
ஏதிலியாய் ஏற்றவர்கள்
உதவிக்கரம் ஈர்ந்தவர்கள்
அடிப்படையில் தேவை தந்து
அடைக்கலமாய் காத்தநிலம்
புகலிடத்து முதலிடமாய்
அகதிகளை அறந்தாங்கும்
சூழல்தனை இணைவாக்கும்
சுதந்திரமாய் வாழ்வளிக்கும்
நாடுகளின் நற்பண்பு
நம் வாழ்வின் அடித்தளமே
நமக்கான கொடை நிலமே
வாழ்வுநிலை ஆதாரம்
வருங்கால வரம்பு நிலை
கல்வியில் உயர்தரத்தில்
உயர்ந்தோங்க உதவிநிற்கும்
அடைக்கலத்து அத்திவாரம்
எழுந்திருக்கும் கோபுரமாய்
எம்மினத்து அடையாளம் எமக்கெனவே பொறிப்பதற்கு
வரமான தேசமே வாகைநிறை ஜேர்மனி
பாரில் நீ ஆதவனாய்
ஒளிரவைத்த ஒளிவிளக்கு
அடைக்கலத்து ஆழிமுத்து!
நன்றி