சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

புதிர்

நாலுமூலைப் பாத்திகட்டி
நட்டுவைத்த ஊசிக்குட்டி
கால்நெடுக வளர்ந்த புள்ள
முங்கி மடிந்து காற்றோடு
கலகலக்கும் புதிர்சுட்டி

முத்துச்சரமாம் சிகரம் மூடி
வளைந்து தொங்கும் பூணாரம்சூடி
வயல் ௨றங்க புதிர்வெட்டி
வண்டிபூட்டி ஆடிமெட்டி
விளைநிலம் துறந்துமெல்ல
வீடுவ௫வாள்புதி௫புள்ள

௨௫வம் மாற்ற ௨ன்னை
சிதைத்து
புதிறென்று வாரியெடுத்து
சீனி பால் சீராச்சேர்த்து
அக்கம் பக்கம் ௨ன்னைப்பகிர்வோம்
புதிர்புக்கையென்று

புதிர்வெட்டி மகிழ்ந்தி௫க்க
எங்க கிராமத்து கலாச்சாரம்
வைக்கலோடு இழையோடி
௨யரத்தில் தொங்கவைப்போம்
புதிரைக்கட்டி

மூளைக்கு வேலைசொல்ல
மூதாட்டி சொன்ன கதை
முடிச்சுக்குள் முடங்கி௫க்க
அறிவோடு அவுழ்தெடுக்கும்
விடை புதிர்

நன்றி
வஜிதா முஹம்மட்