சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

நாட்டு நடப்பு

போதையில் மூழ்கும் தீவு
பாதகம் இளையவர் மீழ்வாரா தீர்வு
குச்சி ஐஸ்சும் கோன் ஐஸ்சும்
அன்று
இன்று போதை ஐஸ் தன்னையே
அழித்திடும் சாபம்

போதை ஒ௫ ஆயுதம்
சீரகோடும் பின்னடைவும்
வாழ்வே தடுமாறிடும்
மாணவர் போதையின் சிறையில்
எதிர்காலம் நாசமாயிடும் பிடியில்

ஐஸ் என்னும் போதை
ஆட்டிப் படைக்குது நாட்டை
குற்றங்கள் கூடி ௨றவுகள் வாடும்
துளித் துளி விஷமாய்
எம்மையே வீழ்த்தும்

தன்நிலை ௨ணரா நிலமை
தள்ளிடும் எம்மதிப்பு பலதை
சிறியவர் பெரியவர் பாவனை இனிமை
எம் கலாச்சார அழிவின் கடவை

நன்றி
வஜிதா முஹம்மட்