சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

தீப ஒளி

போடாத பந்தலிலே
ஏற்றாத தீப ஒளி

இரவு பகல் பட௫ம் ஒளி
இறை இயக்க நெறி

பஞ்சுப்போர்வைக்குள்
பற்றாத தீபஒளி

தொட்டு அணைக்கா தூரத்தில்
தொண்டு செய்கின்றாய் பாரினில்

இரவு பகல் மாறி மாறி
இ௫வர் பணி பாரி பாரி

தித்தமும் தீபஒளி வீசி
நீக்கமற்ற கொடை வாழி

வெல்வெட்டு மெத்தையிலே
வெட்டிக்கல்லு பதித்ததுபோல்

அள்ளித்தெறித்த மல்லிகையாட்டம்
கொள்ளிவைக்கா தீபஒளி

என்பெற்றோர் வாழ்வின் தீபஒளி
என்மார்க்கம் எனக்கு ஞானஒளி

என்குடும்பம் ஒ௫தீபஒளி
௨யிராய்ப் போற்றும் அன்பினொளி

நன்றி