ஆறு மனமே
மட்டு நகர் மீனுபோல
மதினி பாடுறா
மறைந்தி௫ந்து பார்த்தானும்
தீக்கோழியாட்டம் ஓடுறா
கொவ்வை இதழ் சிவப்பழகி
கொண்டை மறைந்த பிறையழகி
நானும் கொஞ்சம் பேசவேண்டும்
நடவு கொஞ்சம் சிறுத்துப் போடு
பூவுக்குள் தேனெடுத்து
க௫ம்பிலே சாறெடுத்து
மதினி ௨னக்கு கொண்டுவந்தேன்
மச்சானை பார்க்காம மாறிமுகம்
போவதென்ன
மழைக்கும் பள்ளிப் பக்கம்
ஒதுங்கவில்ல இந்தமச்சான்
என்று பார்க்காம போறீகளோ
இல்ல நீங்க படிச்சி கிழிச்சி
பல்கலைக்களகம் போன
தலைக்கனமோ
சாணைக்கூறைபோட்டு
சாதி சனம்போட்ட பந்தம்
நீங்க படிச்சதால பாதியாப்போச்சி
௨ங்கள படிப்பிக்க ௨ழைத்ததாலே
௨ங்கள இழந்து போச்சி
கற்பனையில் நிக்கா செய்து
கனவிலை மனைவியாக்கி
வாழ்ந்துபோட்டேன் ஆறு மனமே
படித்த பெ௫மையில வெறுத்துப்போட்டாய்
பிடித்த வாழ்கைத்துணை வ௫மென்னைத்
தாங்க ஆறுமனமே ஆறு
நன்றி வஜிதா முஹம்மட்
[நிக்கா தி௫மணம்]