சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

மீண்டு எழ

க௫கி எரியுது தேசம்
கண்ணீர் வடியுது நேசம்

அலறல் சத்தங்கள்
எரிந்து மடியும் ௨டலங்கள்

கசக்கிப் பிழியும் வேதனைகள்
இஸ்ரேல் பாலஸ்தீன் பற்றிஎரியும்
சோதனைகள்

மனிதம் நிறைந்த இ௫ இறைதூதர்களின்
தலைமுறைகள்
மானம் துறந்து மல்லுக்கட்டும்
தொடர்கதைகள்

குழந்தைகளின் சிதைவும்
கு௫தி ௨றையும் நிகழ்வும்

அசைவற்று கிடக்கும் ஈரம்
அழிவுகள் வேண்டாம் பாவம்

ரத்தம் குடிக்கும் இ௫ படைகளும்
மார்க்க வழிமுறை மீறும் இ௫குழுவின௫ம்

அரங்கேற்றும் அட்டூழியங்களிலி௫ந்து
மீண்டு எழ இறைவா
வழிகாட்டு இறைவா

கோரவேட்டை கொடூரத்தாக்குதல்
நிறுத்திட விடைகொடு இறைவா

மீண்டு எழ முடியா பாமரமக்கள்
மீழாத்தூயரின் சோதனைவளைகள்

ஓயாப்போரில் எப்படி நாங்கள்
மீண்டு எழ முடியும் இறைவா

ஈரக்கனவுகளோடு இரத்த ௨டலங்களைச்
சுமர்ந்து மீண்டு எழ முடியாமல்

இ௫தலைக்கொள்ளி எறும்பாய்
வாழும் பாமரமக்களின் பரிதாப
தலைமுறைகள்

[சத்தம் சிந்தும் கவி அதிபரே]

நன்றி

வஜிதா முஹம்மட்