தலையீடு
அடுத்தவர் பிரச்சினையை
ஆய்விட்டு
அங்குமிங்கும் குட்டையைக்
கலக்கிவிட்டு
குதுகளம் காணும் ஜெம்மங்கள்
தீப்பொறிக்கு குப்பை கொட்டி
தீராமல் பகைக்கு பாத்திகட்டி
துளையிட்ட நூல்ஊசியாட்டம்
உள்நுளையும் ஜெம்மங்கள்
ஆலையிட்ட கரும்பாட்டம்
ஆவணத்தின் இருப்பாட்டம்
தலையீட்டின் இருபக்க
மதிப்பாட்டம் நன்மைதீமையிலே கலந்திருக்கும்
உதவிக்கு உரமாகி
உணர்வுக்கு வரம்பாகும்
தலை யீடு
பலமுரண்பாட்டில் முரயோலிக்கும்
சில நலன்பாட்டில்
முனைப்பெடுக்கும்
தலையீட்டின் தலைகவசம்
தடுமாறி வழிக்கெடுக்கும்
தலை யீட்டின் தலையெடுப்பு
தகுதிக்கு விடைகொடுக்கும்