காதல்
க௫ணை கலக்கும்
கனிவின் கவிதையாய்॥
காற்றும் காக்கும்
காத்தி௫ப்பு காதலாய்॥
கிளிஞ்சல் கிள்ளி
கிலோவில் கிடைப்பாய் ॥
கீற்றின் கீதம்
கீச்சிடும் கீர்த்தனையாய்॥
குறிஞ்சிக் குயில்
குழவு குமரியாய்॥
கூர்மை கூரிய
கூட்டல் கூறலாய்॥
கெங்சை கெஞ்சும்
கெண்டி கெத்தாய்॥
[கெங்சை..கால்சலங்கை] கெண்டி [மீன் வகை]
கேசம் கேணி
கேட்டாய் கேடயமாய்॥
கொழு கொழும்பு
கொடிஞ்சி கொடியாய்॥
கோடிக் கோலம்
கோட்டைக் கோ னாய்॥
வஜிதா முஹம்மட்
நெதர்லாந்து