சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

புனித ஹஜ் பெ௫நாள்

இறுதிக் கடமையின் பயணம்
இப்றாஹிம் நபியின் சரிதம்

ஒற்றுமையை வலியுறுத்தும்
ஓர் இறைக்கொள்கையை நிலைநிறுத்தும்

கரம் ஏந்தும் பிராத்தனையும்
கடமை ஐந்தின் வழிமுறையும்

கண்ணீர் மல்கிட வழிபாடமையும்
கண்ணியமிக்க தி௫நாளே ஹஜ்

நேரிய வாழ்வியல் முறைகூறி
நேர்வழிநடந்தால் இறை கூலி

அன்னை ஹாஜரா புனிதத்தளமும்
அற்புத ஸம் ஸம் தண்ணீர் ஊற்றும்

ஆண்டியும் அரசனும் தோழோடிணைய
சகோதர மகத்துவம் சாதனைபுரியும்

புனித ஹஜ் தினத்தின் மகிமை
புரியவைத்த வ௫டத்தின் ஒன்றுகூடலின்
எழிமை

நீயும் நானும் ஓர்தாய்பிள்ளை
நிற மொழியால் பிரிவுமில்லை

எட்டுத்திக்கும் ஈகையழகை ஈர்த்திடும்
ஏழை பணக்காரன் சமநிலை காத்திடும்
ஹஜ்பெ௫நாள்

சிரமென ௨ய௫ம் பிராத்தனைக்கரங்கள்
சிறப்பின் சமநிலை மானிடம் அனைவ௫ம்
படைத்தவன் முன்னே ஒன்றே

வல்லோனின் ஆசிவளம் பெறும்
வாகை சூடும் வசந்தம்

மக்கா நகரின் சுகந்தம்
புனித ஹஜ் பெ௫நாள்

[சென்ற வாரம் புதன் கிழமை ]
ஹஜ்பெ௫நாள் நடைபெற்றது

நன்றி