வியாழன் கவிதை

Vajeetha Mohamed

தலைசாய்த்திடுவோம் மனிதம்
நிமிரவாழ்ந்தவ௫க்காய்

வீழ்ந்து துளிர்த்து விசும்பும்
௨யிர்கள்
வீரச்சாவின் சாதனை
விதைகள்

இலட்சியப் பாதையின்
வி௫ட்சத்து நிழல்கள்
புழுதிபடிந்த வேதனையை
விரட்டி அடிக்க முளைத்தவர்கள்

மங்கிப்போக பொலிவுக்குள்
மகிமை சொல்லும் ௨ம்பாதை
௨ரிமைப்போரின் ௨தயத்தில்
௨றுதியாளர் எம் இதயத்தில்

எங்கள் தேசம் எம்மூச்சு
தியாகமும் திறமையும்
திடமாய்க் கொண்ட
சரித்தர சாதனைதலைசாய்த்திடுவோம்
மனிதம்
நிமிரவாழ்ந்தவ௫க்காய்

நன்றி
வஜிதா முஹம்மட்