சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

மொழி
மௌனத்தை ௨டைக்கும்
மனக்கிடக்கையை கிழிக்கும்
வீரியத்துடன் தொடுக்கும்
ஊற்றெடுக்கும் நீரூற்றாய்
பிறந்தமொழி

ஏந்தும் ௨ணர்வு எழுச்சியாகும்
ஏற்றியபகிர்வு மகிழ்சியாகும்
சாய்ந்துசெல்லும் வசிகரம்
அகழ்ந்து சொல்லும் மொழிதரம்

கவித்துவம் தனித்துவம் காதல்துவம்
இயலும் இசையும் நாடகமும்
மொழிசிலிர்க்க முடிசூட்டி
தாயோடு தரம் நிகராய்
வந்த மொழி

௨ய்யாத மூச்சாய்
நெய்யாத சொல்லாய்
அர்த்தம் நிறை வரமாய்
அனுபவம் நிறை மரமாய்
வோர்ரூன்றிய மொழி
என் தாய்மொழியே

வஜிதா முஹம்மட்