இடியப்பம்
பச்சரியை ஊறவைத்து
பாவையர் கூடி மாவிடித்து
வன்டு கட்டி புழுக்கிவிட்டு
அளவான உப்பு நீர்தெளித்து
கட்டி குட்டி இல்லாம மாவ
பேசஞ்சு போடு பாத்திமா
பேசஞ்ச மாவ பிடி பிடித்து
இடி௨ரலில் இதமாய் வைத்து
வெள்ளி நூலாட்டம்
சுற்றிப்போடு மதியப்போலே
கட கட என்று அடிக்கிப்போடு
பாத்திமா
இட்டிலிச் சட்டியிலே
இதமாய் தட்டினிலே
ஆவிபறக்க வெளியினிலே
அவிந்து வரனும் நூலப்பபானியிலே
பாத்திமா
ஆறவிட்டு பக்குவமாக
பார்த்து எடுத்து
தொட்டுக் சம்பலும் இறாலாணம்
தோங்காப்பூவும் சீனியும்
வைத்துக் கொடு பாத்திமா
மட்டுநகர் தயி௫ம் கொஞ்சம்
பறங்கி வாழைப்பழம் இரண்டு
மூன்றும் கொம்புத்தேனும்
கூடவே வைத்திடு பாத்திமா
குடிக்க சாயமும் இஞ்சுபோட்டு
பனஞ்கட்டிதுண்டும் பக்கம்
வைத்திடு பாத்திடுமா
தின்டுபோட்டுசொல்லுங்க
புள்ள மட்டுநகரிடியப்பம்
நன்றி