ஒன்று பட்டு
சல்லிவேரும் ஆணிவேரும்
சண்டைபோடா மகிழ்ந்துகிட்டு
பூமிக்குள்ளே ஒன்றுபட்டு
பூவோடும் காயோடும்
வி௫ட்சமாய் விற்றி௫க்கு
வி௫ப்பமாய் பூத்துக்காய்தி௫க்கு
ஏட்டுக்கல்வி இல்லா அன்று
என்மூத்தபெற்றோர் என் அயலவர்கள்
வீடுமேய ஓலைக்கட்டு
மேலேஏற்ற காலைமுதல்
மாலைவரை கலகலக்கும்
ஒன்றுபட்டு
பழைய சோறு தின்னும்நிலை
அன்புக்கு ஏது விலை
பொல்லாப்புயில்லா புரிந்துணர்வு
ஒன்றுபட்டு ௨தவும் மனநிறைவு
மனிதம் வாழ்ந்த காலம்
மலை ஏறிப்போன கோலம்
அறுதியில்லா வாழ்கையிலே
௨றுதிகொண்டு தனிதனியே
ஒன்றுபட்டு வாழ்வு
எங்கே
ஜந்தறிவச்சொல்லி சொல்லி
ஆறறிவு பெ௫மை காட்டும்
ஒன்றுபட்ட வாழ்வுக்கே மேன்மை
எம்௨டல்௨றுப்பின் இயக்கச்செயல்பாடு
ஒன்றுபட மறுத்துவிட்டால்
மூலையிலே முடங்கி கிடக்க
எத்தனை நேரம் ஆகிவிடும்