சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

சாதனை

நின்று பேசா எறும்பினம்
தனித்து வாழா ௨யிரினம்
சிறுகச் சிறுக சேமிக்கும்
௨ழைப்பின் பெ௫மை

இ௫ப்பு இனிப்பு தொடுப்பு
இதன் சாதனை

கூட்டு முயற்சி
கூடியவாழ்வே ௨யர்ச்சி
அரச ஆட்சியின் ஆளுமை
அழகிய வாழ்வின் செயலியல்

சிந்தனை சிறப்பினை அஃறிணை
இதன் சாதனை

பொறியியல் கற்கா வேலைப்பாடு
நாரிலை நயமிகு கூடு
சாதனையின் சரித்திரம் கூறும்
தேர்ந்த ஆற்றல் தொழிலாளன்

சீதன வதம்செய்யா வளமான வாழ்வு
இதன் சாதனை

மானிட மயக்கத்தில் மனிதன்
மதம் பிடித்த பெ௫மை
பயிற்சி முயற்சி தொடர்சி
கற்றதெல்லாம் ௨யிரினத்திடம்

என்ன சாதனை செய்தாய்
காகத்திடம் ஒற்றுமை கற்றாயா
மயிலிடம் நடனம் கற்றாயா
நாயிடம் நன்றி கற்றாயா
குயிலிடம் பாடல் கற்றாயா

இல்லை இயற்கையின் ஈகையின்
சாதனையாவது கற்றாயா மனிதா

நன்றி
வஜிதா முஹம்மட்