நீ பிறந்ததால் இந்நாள்
புதுமையானது பொலிவானது….
மனிதம் காத்து
மகிமை சேர்த்து
புனிதம் நிறைத்து
புண்ணியம் சேர்த்தாய்…
தேய்ந்து மணம் வீசி
உருகி ஒளி தந்து
சாய்ந்தும் நிழல் தரும்
சாலையோர மரமாய் நீ…
இறைத்த கிணரே ஊறும்
இயற்கையை மெய்ப்பித்தவள் நீ
மறை வழி நின்று
மறுமைக்காய் சேமித்தவள் நீ…
உன்னிடம் கற்க பாடங்கள் ஆயிரம்
கடின உழைப்பு
சற்றும் களைக்காத முனைப்பு
உரமேறிய உள்ளம்
உயிர் மூச்சாய் பாசம்…
துரோகங்களை துடைத்தெரிவாய்
துணிவுடன் எதிர்கொள்வாய்
குறைகளுடன் பிறரை ஏற்பாய்
குற்றம் தேடாமல் இணைவாய் …
பரந்த உள்ளமும்
பரிவுணர்வும்
பாங்காய் கொண்டவள் ….
என்றும் சந்தோசமாய் வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் …
மர்ழியா அபூபக்கர்.♥️[;எனது இழைய சகோதரி எனக்கா எழுதிய கவிதை
இவர் பாலைநகர் மாஹா வித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமையாற்றுகின்றார்;]