புழுதி வாரி மண்வாசம்
மண்ணின் சுரப்பிய
மணமாய் வாங்கினோம்
மழையின் துளியிலே
மகிழ்ந்து ௨றிஞ்சினோம்
மண்ணோடு மண்குழைந்து
மசக்கப்பொண்ணு மயக்கம்போல
காற்றோடு காதல்செய்து
புழுதிவாரி மண் புரட்சிசெய்யும்
சல்லிக்கல்லு கடற்கரையில்
கஞ்சாங்காற்று கலவைசெய்து
கண்ணுக்குள் புழுதிவாரி
௨ள்புக முயற்சிசெய்ய
ஈரிமையும் இறுக்கிமூடி
இமைமுட்டி தட்டுத்தடுமாறும்
கூட்டுவண்டி குடுகுடுவெண்டு
ஓட
மாடுதுள்ளி புழுதிவாரி மண்ண
அள்ள
பட்சிகள் கூட்டம் படுத்து மெல்ல
சிறகடித்து ௨௫ள
புழுதிவாரி மண் பூகம்பம்போல
௨யர
ஊ௫பலாய் பேசி பலர்
ஊரைச்சுற்றி வ௫வார் தினம்
வீபீசி செய்திபோல சுடச்சுட
சண்டை வ௫ம் ;;;;;
ஒழுங்க்கையிலே இ௫கூட்டம்
எதி௫ம் புதி௫மாய் போரெழ
புழுதிவாரி மண்ணை வீசி
திட்டித்தீர்ப்பார் காட்சியாய் பார்த்தோம்
அன்று
இப்போ புழுதியில்லா தரைநிலம்
எங்கும்
மாபில்பதித்து மனிதன்
சறுக்கிவிழுந்து ௨யிரை மாக்கிறான்
வஜிதா முஹம்மட்