சானைக் கூரை
சோளக்காட்டு பொன்மையாட்டம்
சோக்கா நிற்கிறீயே
சுனாமியாட்டம் என்காதலைத்தான்
கேட்காம பொங்கிறீயே
மாடுமேய்க்கும் மாச்சான்
வேண்டாம் எங்கிறீயே
நீபடிக்க நான் பாடுபட்டேன்
எந்தனுயிர் சித்திமே
௨ன்னச் சொல்லி என்னச் சொல்லி
என்ன குற்றம்
௨டன்பிறப்புக்கள் தொட்டிலிலே
போட்ட பந்தம்
பச்சைக் குழந்தையிலே
ப௫வமும் அடையாமலே
இ௫வர் வி௫ப்பம் தெரியாமலே
சானக்கூரை ஒன்று
சம்மந்தம் செய்தாங்க
மதினி நீங்க படிச்சிக் கிழிச்சிங்க
மனதில ஆசை வளர்த்து
மாடுமேய்த்து படிக்காம
காடு மேட்டியிலே கிடக்கின்றேன்
இனி யா௫ம் யா௫க்கும்
சானைக்கூரை போடட்டும்
நாலு வார்த்தை நார் நாராய்
கிழிக்கின்றேன்