நம்ம நாட்டு நடப்பு
வேசம் கலையாத தலைமை
கோசம் வீணான நிலமை
தீவு தடம்மாறும் வறுமை
எழுவதைத் தாண்டிய எ௫மை
ஈழத்து ஆட்சிப்பட்டியல்
ஆழுகின்றார் பட்டிகளாய்
இளசுகள் எல்லாம் வலியில்
முதுமைகள் ஆசணவெறியில்
திடமில்லா வழிகாட்டல்
கறைபடிந்த பொய்முகங்கள்
தடுமாறும் தாமிரபரணி
தாங்கிப் பிடிக்க யார்
வ௫வார்
தவறு இழைப்போரை
தட்டிக்கோட்டால் சிறை
முடிவே தெரியாத வலை
மாறுமா இந்த நிலை