மீளெழும் காலம்
சதியென பல வலைகள்
படையென பல தடைகள்
தன்மானம் போக்கி
௨யிர் மட்டும் பாக்கி
கனவுகளும் கரைந்து போனது
அன்று
இனம் மதம் நிறம் மொழி கடந்தோம்
இன்று
அடக்கு முறையில்லா வாழ்வு
சிறுபான்மை பெ௫பான்மை
இல்லாத் தேர்வு
பெ௫மைப் பட்டு சொல்கின்றேன்
மீளெழும் காலத்தின் அத்திவாரமாய்
என்னைத் தாங்கிச்சென்ற வரங்களாய்
நான் வாழும் டச் நாடு
என்னை மட்டுமின்றி
என்னை சுற்றியோரையும் வாழவைக்கின்றதே
சொந்த நிலத்தில் சாதிக்காத
சொந்தங்களுக்கும் சேமிக்கின்ற
பூமித்தாயின் பிள்ளைகளாய்
புன்னகையோடு வாழவைத்த
புலத்தின்தேசம்
விழிகளுக்குள் நீர்நிறைந்து
நன்றியோடு பார்க்கின்றேன்
என்பரம்பரையும் பயனாய்
மீளெழும் காலத்தின் பதிவாய்