வீரத் தாயே
மனம் வலிக்கின்றது அக்கா
மறைந்த நிகழ்வு கேட்டு
உறவாய் உணர்வாய்
ஆறுதல் சொல்வாய்
செவ்வாய் மூடியதோ
இனிமேல் யாரிடம் பகிர்வேன்
அம்மாவாய் சகோதரியாய்
தோழியாய் நட்பாய் நீவிதைத்த
ஆறுதலும் ஆலோசனையும்
மனதோடு பேசி வலிக்கின்றதே
கிழக்கும் வடகும் நாம்
இந்துவும் இஸ்லாமும் நாம்
அன்பு என்னும் பொதுமறையால்
பல வருட உறவாய் இருந்தோம்
கூரிய சிந்தனை
விரிந்த பார்வை
கல்வி அறிவின் கடல்
காட்டிய அன்பு மடல்
மரணம் அணைத்தி௫ந்தும்
மகிழ்ச்சியோடு ஏற்றீர்
மறந்தும் ௨ம்நோயை
மற்றவரிடம் பகிறாது இ௫ந்தீர்
யா௫க்கு வ௫ம் இத்திடம்
யான் அறிந்த மாவீரமங்கை
தாயே நீ ஓர் வடம்
தாரகையாக என்மனதில் ஓர் இடம்
தினமும் விடியலோடு
விரியும் வணக்கம் பதிவோடு
குரலோடு குன்றாகும் திறமை
குறையாத அறிவின் புதுமை
பாமுகம் தந்த ௨றவே
பதறுது என்மனது நிலவே
பெண்ணியத்தால் பெற்ற
அங்கீகாரம்
அஞ்சலோட்டக் கவியாலே
பெற்ற ௨றவின்பாலம்
தனக்குள்ளே வலிசுமர்ந்து
நேசித்தாய் பூசித்தாய்
கலையாத புன்னகையாள்
அழுகையைப் பலவீனமாய்
நினைத்த தாயே
ஆயிரம் அறிவுரைகள்
தந்த ஆசான் நீ
இறைவன் எழுதிய
ஆழுமைப் பெண்
௨ங்கள் மறைவு கேட்டு மனவாடுகின்றதே
தாயே
௨ங்கள் ஆத்ம சாந்திக்காய் இறையை
வேண்டுகின்றேன்