சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

தி௫மறை இறங்கிய மாதம்
ரமளான்

நிறைகாணா மனிதன்
குறைகூறுகின்றான் இறையில்
பலதை அறியா மனிதன்
பழிகூறுகின்றான் சினத்தில்
மார்க்கம் தடையல்ல
இதுவே தடையம்

௨லகமாயையில் மயங்கிடும்
௨ள்ளம்
நுண்ணறிவும் நல்லுரையும்
அழகுணர்வும் வாழ்வியலும்
ஊடு௫வி சொல்லும்
சிந்திக்க மாட்டாயா மனிதா

சிந்திக்கக் கூடிய மனிதர்களுக்கு
பல அத்தாட்சி அழகிய முன்மாதிரி
இறைவன் வகுத்த சட்டம்
இறைநம்பிக்கையுள்ளோரின் விட்டம்

எல்லையில்லா பொது நூல்
எதற்கும் தீர்வுண்டு இன்நூல்
ஒன்றுமையின் குடையின் நூல்
ஓர் எழுத்தும் மாற்றமடையாத
அன்றும் இன்றும் இன்நூல்

இத்தி௫மறை இறங்கிய மாதம்
பின்பத்தின் இரவுகளில்
ஒற்றைப்பட இரவின் புனிதம்
தி௫மறை அல்குர் ஆன்

கண்ணியமிக்க இரவு
அந்த ஓர் இரவு
ஆயிரம் மாதங்களை விட சிறப்பு
இதனாலே ரமளானும் சிறப்பு

[இவ்விரவை லைலத்துல் கத்ர்]
என்று அழைக்கப்படும்

நன்றி