வியாழன் கவிதை

Vajeetha Mohamed

ராஜபக்சர்கள்

போராட போராட
ஊழல் ஊற்றாய்
கவிழ்த்தாலும் வீதிகளில்
கிழித்தாலும் அசையமாட்டோம்
உழல் ஆட்சி

பத்தி எரியும் மனங்கள்
நெளிந்து செல்லும் புழுக்கள்
காலிமுகத் திடல் அரன்கள்
கள்ளிச்செடி அகற்ற திடங்கள்

திவால் நிலையில் அரசாங்கம்
தி௫டர்கள் கூட்டம் அமைச்சர்கள்
அதிரக் கடன் சுமை
அத்தியாவசியப் பொ௫ட்கள்
குறை

அன்னியக் கடன்கள்
அப்பாடா
அன்னியச் செலாவாணி
கையி௫ப்பு கின்னியம்போலே

பிதறிக்கொண்டே பேசும்
மகிந்தா
யுத்தத்தை நிறுத்திதேன்
ஏன் மறந்தாய்

கிழிந்த சேலை போலே
தொங்குது தலைமைகள்
போராட்ட கம்பங்கள் மேலே
விம்மிவெடித்தும் கூட்டங்கள்

ஆனாலும் அசையமாட்டோம்
அமர்ந்திட்ட சிம்மாசனம்
முட்டாள்கள்போட்ட கல்லாய்
வாக்கு என்னும் ஆற்றுக்குள்
பாசி பிடித்து நிற்கின்றது

நன்றி