இறங்கு வரிசையிலே
கடல் வளம் மாறி
கடன் வளமாச்சி
விலைவாசி ஏறி
வீதிகளில் போராட்டமாச்சி
கூறுபோட்டு தீவு
கடன் தீராத் தீர்வு
குழாயடிச் சண்டைபோலே
சிலிண்டரடி தேடி ஓடி
நீண்டவரிசை பாரிர்
இலங்கை ரூபாய் நத்தீங்
டொலரின் பவுன் ஈரோ
மதிப்பு டப்பிங்
மின்சாரம் தினமும் கட்டு
அந்த ஆட்சிய மாற்றி
அண்ணன் தம்பிய வீட்டுக்கு
அனுப்ப மூட்டையைக் கட்டு
மாற்றி யோசி
டீ குடிக்க அங்கர் இல்லை
தேனீர் போட மண்ணெண்யை இல்லை
வாகனம் ஓட எரிபொ௫ளில்லை
வயிற்றை நிரப்ப வ௫மானமில்லை
ஏறுது ஏறுது சாமன்
தங்க விலை
தங்கம் ஏறி நிற்குது
இமய விலை
இலங்கை பின்னேற்றம்
சோமாலியா
பஞ்சமும் பசியும் பட்டனித் தீர்வும்
பலியாய் மாறுது பஞ்சமா பாதகத்தில்
நன்றி